செய்முறை:
நாம் உட்கார்ந்து கொண்டு இந்த முத்திரை பயிற்சியை செய்யவேண்டும். நம்து இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் மீது வைத்துக்கொள்ளவேண்டும். பெருவிரலை சிறுவிரலின் அடிப்பகுதியில் வைத்துக்கொள்ளவேண்டும். பெருவிரலை சுற்றி மற்ற நான்கு விரல்களால் மூடவேண்டும். இப்போது சுவாசப்பயிற்சி செய்யவேண்டும்.
அதாவது மூக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். இப்போது "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை 7 முறை சொல்லவேண்டும். அந்த ஒலி வலது காதில் ஒலிக்கும்போது தலைப்பகுதியை அடையும். இப்பொழுது உள்ளிழுத்த காற்றை மெல்ல வெளியே விடவேண்டும். காற்றை வெளியே விடும்போது கைகளை விரிக்க வேண்டும்.
நம்முடைய கவலை, பயம், சோகம், துரதிருஷ்டம், தோஷங்கள், மகிழ்ச்சியின்மை ஆகியவைகள் நம்மை விட்டு நீங்கிவிட்டதாக நினைக்கவேண்டும். மீண்டும் இந்த முத்திரையை மேலே கூறியபடி குறைந்த அளவு 7 முறையும் அதிக அளவாக 48 முறையும் செய்யலாம்.
சி முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள் :
* இந்த முத்திரை பயிற்சியை ஒழுங்காக செய்தால் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
* இந்த முத்திரை உடலுக்கும் மனதிற்கும் ஒரு காந்த சக்தியையும் ஒரு வசீகரத்தையும் கொடுக்கும்.
* மனச்சோர்வு நீங்கும்.
* உடலின் ஆதாரப்பொருளான நீர்ச்சத்து கட்டுப்பாட்டில் இருக்கும்.
* மகிழ்ச்சியான உள்ளுணர்வு அதிகரிக்கும்.
* மூளையின் சக்தி அதிகரிக்கும்.
* மனம் எப்பொழுதும் சந்தோஷத்தில் இருக்கும்.
* அதிசய நிகழ்வுகள் உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்படும்.
இந்த முத்திரை பயிற்சி பத்மாசனத்தில் அமர்ந்தபடி செய்தால் மிகவும் நல்லது. வயதானவர்கள் மற்றும் பத்மாசனத்தில் உட்கார்ந்து செய்ய முடியாதவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து செய்யலாம். குறைந்தது 7 முறையும் அன்றைய தினத்தில் அதிகபட்சமாக 48 முறையும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம்.