மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 25 October 2021

கற்களும் வாழ்க்கையும்


         துறவியிடம் ஆலோசனை கேட்க வந்திருந்தார் ஒருவர். “24 மணி நேரமும் வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதா? குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதா? இல்லை கடைக்குச் சென்று வியாபாரத்தைப் பார்ப்பதா? என குழப்பங்கள் எனக்குள் கூடுகட்டி வாழ்கின்றன. எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற குழப்பத்திலேயே எந்த வேலையையும் என்னால் செய்ய முடியவில்லை. எனவே நீங்கள் தான் எனக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டும் " என்றார் அவர்.


      துறவி அவரை நோக்கி மெலிதாகச் சிரித்து விட்டு உள்ளே போனார். "என்னடா இது? நாம் பிரச்சினையைத் தீர்க்கச் சொன்னால் சிரித்தபடி உள்ளே போகிறாரே" என்ற குழப்பத்துடன் அந்த மனிதர் அமர்ந்திருந்தார்.

      ஒரு கண்ணாடி ஜாடி, 3 பெரிய கற்கள், 5 சிறிய கற்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு துறவி வந்தார். "ஜாடியை இங்கிருக்கும் கற்களால் நிரப்பு" என்றார். அறிவுரை கேட்க வந்த எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும் என்று மனதிற்குள் நொந்தபடி, அறிவுரை கேட்க வந்த மனிதர் முதலில் பெரிய கற்களை உள்ளே போட்டார். பிறகு மேலே இருந்த இடைவெளிகளில் சிறிய கற்களை போட்டு நிரப்பினார்.

       "முதலில் பெரிய கற்களையும் பிறகு சிறிய கற்களையும் ஏன் போட்டாய்?” என்று துறவி கேட்டார். "முதலில் சிறிய கற்களைப் போட்டுவிட்டால், பிறகு பெரிய கற்களைப் போட போதிய இடம் இருக்காது. அதனால்தான்" என்றார் அவர்.

      வாழ்க்கையும் அப்படித்தான். இப்போது செய்யாவிட்டால் பிறகு செய்யவே முடியாத வேலைகளை உடனேசெய்து விட வேண்டும். எனவே வியாபாரத்தை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். முதலில் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துப் போ" என்றார் துறவி. தெளிவு பெற்ற அந்த மனிதர் வீட்டிற்கு ஓடினார்.

நீதி : வேலைகள் இருந்துகொண்டே இருக்கிறது என்றால் நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.



Stones and Life

         Monk had come to consult a man. ''I have to work 24 hours a day. The wife is not well. Take her to the hospital? Taking the child to school? No. Go to the store and see the business? As confusions live nestled within me. I could not do any work in the confusion of which work to focus on. So you have to show me a better way" the man said.



       Monk smiled at man and went inside. The monk came carrying a glass jar, 3 large stones and 5 small stones. "Fill the jar with the stones here," said the monk. I also came to ask for advice. With that still lingering in his mind that he still wanted, the man first put the big stones inside. Then he filled the gaps above with small stones.

      "Why did you put the big stones first and then the small stones?" The monk asked. "If you put small stones first, then there will not be enough space to put big stones. That's why, "said that man.

      "Life is like that. If you do not do it now, you will not be able to do it right away to be done. So you can take care of business anytime. Take your wife to the hospital first." The master said.


Justice: If jobs continue to exist it means you are making progress.


Pages