மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 5 October 2021

உலகின் முதல் விவசாயி இவர்தான்


        அதிக அளவிலான உடற்சக்தி கொண்ட உயிரினத்தில் , எறுப்பு முக்கிய இடம் பிடிக்கிறது. இதன் சுறுசுறுப்பு அனைவரும் அறிந்ததே. எறும்பு பற்றி அறியாத சில விஷயங்கள் பல உள்ளன.. 


* உலகத்தில் உள்ள மொத்த மனிதர்களின் எண்ணிக்கைக்கு சமமாக, எறும்புகளின் எண்ணிக்கையும் இருப்பதாக ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன.

* அண்டார்டிகா கண்டம் தவிர, உலக அளவில் மற்ற அனைத்து கண்டங்களிலும் எறும்புகள் பரவலாக வாழ்ந்து வருகின்றன. இதுவரை சுமார் 12 ஆயிரம் எறும்பு இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

* எறும்புகளின் தற்போதைய குறிப்பிடத்தக்க பரிமாணம் நடைபெற்று, சுமார் 130 மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்கு முன்பிருந்தே எறும்பு இனங்கள் வாழ்ந்து வருகின்றன.

• எறும்பு நான்கு பருவங்களைக் கொண்டது. முட்டை, முட்டை புழு, கூட்டுப்புழு, வளர்ச்சியடைந்த எறும்பு என்று இதன் பருவங்கள் இருக்கின்றன. 

* சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள் வரை உயிர்வாழும். ஒரு சில பெண் எறும்புகள், குறிப்பாக ராணி எறும்புகள் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. 


• எறும்புகள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. இந்தக் கூட்டத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ராணி எறும்புகள் இருக்கும். தவிர ஆண் எறும்புகள், பணியாள் எறும்புகள், காவலாளி எறும்புகள் என்ற பிரிவில் எறும்புகள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்கின்றன.

* ராணி எறும்புகள்தான், எறும்புக் கூட்டத்தின் வலிமை. அவைதான் எறும்புக் கூட்டத்தை வழி நடத்துகின்றன. ராணி எறும்புகள் இல்லாத பட்சத்தில், எறும்புக் கூட்டம் சிதறிப்போகும். ஆண் எறும்புகளுக்கு இனப்பெருக்கம் செய்வது ஒன்றே வேலை. பணியாள் எறும்புகள் உணவுத் தேவைகளை கவனித்துக் கொள்கின்றன. காவலாளி எறும்புகள், தங்களின் இருப்பிடத்தை கவனமாக பார்த்துக் கொள்கின்றன. 

* எறும்புகளுக்கு காது கிடையாது. அவை தன்னைச் சுற்றி நடைபெறும் விஷயங்களை அதிர்வுகளை வைத்தே அறிந்துகொள்கின்றன.

* எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒன்றில் தனக்கான உணவுகளையும், மற்றொன்றில் பிற எறும்புகளின் தேவைக்கான உணவுகளையும் சேமித்து வைக்கின்றன.

• எறும்புகளால் தங்கள் எடையை விட 50 மடங்கு அதிக எடையை சுமக்க முடியும். பல எறும்புகள் இணைந்து மேலும் பல மடங்கு எடையைத் தூக்கிச்செல்லும்.

* எறும்பு இனங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. மேலும் இந்த காடுகளில் ' புல்லட் ' என்ற எறும்பு இனம் உள்ளது. இது மனிதர்களை கடிக்கும் வேளையில், ஒரு துப்பாக்கியில் இருந்து பாய்ந்து வரும் குண்டு துளைத்தால் எவ்வளவு வலி ஏற்படுமோ அதே போல் இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 



* மனிதர்களைப் போலவே, தங்களுக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய விவசாயத்தில் ஈடுபடுபவை, எறும்புகள். இந்த உலகத்திலேயே மனிதர்களும், எறும்புகளும் மட்டும்தான் விவசாயம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் மனிதர்கள் விவசாயம் செய்வதற்கு முன்பிருந்தே எறும்புகள் விவசாயம் செய்து வருகின்றனவாம். 

* எறும்பு புற்றுகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். அதன் அடிப்பகுதியை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அது ஒரு கோட்டையைப் போல இருக்குமாம். எறும்புகள் தங்களின் உணவை சேமிக்கவும், வாழ்விடமாகவும் இதனைப் பயன்படுத்துகின்றன. பல புற்றுகள் அடிப் பகுதியில் இணைந்து வரும் போது அது ஒரு மிகப்பெரிய புற்றாக மாறிப்போக வாய்ப்பிருக்கிறது.

* 2002 - ம் ஆண்டில் அப்படியொரு மிகப்பெரிய எறும்பு புற்று கண்டுபிடிக்கப்பட்டது. இத்தாலியில் இருந்து ஸ்பெயின் எல்லை வரை நீண்டிருந்தது. இதன் நீளம் எவ்வளவு தெரியுமா? 5,954 கிலோமீட்டர் தூரம்.

Pages