மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 8 October 2021

மனம் ஒரு குரங்கு.


        ஜென் மாஸ்டரைப் பார்க்க ஜிங் வந்திருந்தார் . அவர் வந்தவுடன் மாஸ்டர் தான் பாசமுடன் வளர்க்கும் குரங்கிடம் , "விருந்தினருக்கு தண்ணீர் கொண்டுவா" எனக் கட்டளையிட்டார். "குடுகுடு'' வென ஓடிய குரங்கு ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தது.


       குரங்கு சொன்ன வேலையை செய்தவுடன் அருகிலிருந்த குச்சியால் மாஸ்டர் குரங்கிற்கு ஒரு அடி கொடுத்தார். ஜிங்ஜியிடம் மாஸ்டர் பேசிக் கொண்டிருந்த போது காற்றில் கதவு படாரென்று அடித்தது. "போய் கதவைச் சாத்திவிட்டு வா" என குரங்கிடம் மாஸ்டர் கட்டளையிட்டார். இம்முறையும் வேலையை முடித்தவுடன் குரங்கிற்கு ஒரு அடி கிடைத்தது.



     "கருணையின் வடிவமாக இருக்க வேண்டிய நீங்கள் இவ்வளவு கொடூரமானவராக இருக்கிறீர்களே! சொல்கிற வேலையைச் சரியாக செய்து முடிக்கும் குரங்கிற்கு போய் அடி கொடுக்கிறீர்களே!" என்று மாஸ்டரிடம் கோபமாகக் கேட்டார் ஜிங்ஜீ. மாஸ்டர் சிறு புன்னகையுடன், "சரி! இனி நான் அதை அடிக்கவில்லை" என்றார்.


      "தண்ணீர் குவளையை உள்ளே வைத்துவிட்டு வா" என்று மாஸ்டர் குரங்கிற்கு கட்டளையிட்டார். இம்முறை வேலையை முடித்த பிறகு குரங்கிற்கு அடி கிடைக்க வில்லை. குரங்கிற்கு ஒரே ஆச்சரியம். மாஸ்டரின் முகத்தைப் பார்த்தது. மாஸ்டர் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தார். அடுத்ததும் ஒரு வேலையை குரங்கு செய்து முடித்தது. ஆனால் அடி கிடைக்கவில்லை. குரங்கிற்கு ஒரே சந்தோஷம்.


          உடனே தாவி ஜிங்ஜீயின் தோளில் அமர்ந்தது. அடுத்து தலைமுடியைப் பிடித்து இழுத்தது. ஜிங்ஜீ நெளிய ஆரம்பித்தார். ஜிங்ஜீ முகத்தில் தனது கூரிய நகத்தால் குரங்கு அன்பாக ஒரு கையெழுத்து போட்டது. ஜிங்ஜீ வலியால்,"ஐயோ ! முட்டாள் குரங்கே ! " என சப்தமிட்டு, குரங்கை கீழே தள்ளினார். மாஸ்டர் குச்சியை எடுத்து குரங்கிற்கு ஒரு அடி கொடுத்தார். உடனே குரங்கு பாந்தமாக வந்து அமர்ந்து கொண்டது. மாஸ்டர் குரங்கை அடிப்பதற்கான ரகசியம் ஜிங்ஜீயிற்கு அப்போதுதான் புரிந்தது.


       நீதி : மனம் என்பது குரங்கு போன்றது. அதன் போக்கில் விட்டால் துன்பம்தான் கிடைக்கும். எனவே அதனை கட்டுப்படுத்தக் கற்க வேண்டும்.



In English:
       Jing had come to see Zen Master.  As soon as he arrived the master commanded the affectionately growing monkey, "Bring water for the guest."  The "monkey" ran away and brought a glass of water.


       Once the monkey had done the said work the master gave the monkey a blow with a nearby stick.  While the master was talking to Jinji, the door slammed shut in the air.  "Go and get the door," the master ordered the monkey.  This time the monkey got a kick when he finished the job.


 "You're so cruel that you have to be a form of mercy! You go and kick the monkey who gets the job done right!"  Jingji asked the master angrily.  The master said with a small smile, "Okay! I'm not hitting it anymore."


 "Put the water glass inside," the master ordered the monkey.  This time the monkey did not get a foot after finishing the work.  The only surprise for the monkey.  Looked at the master's face.  The master was actively conversing.  Next the monkey finished doing a job.  But the feet are not available.  The only happiness for the monkey.


     Immediately Tawi sat on Jinji's shoulder.  Next grabbed the hair and pulled.  Jinji started thin.  The monkey lovingly put a signature with his sharp claw on Jinji's face.  Jingji screamed in pain, "Aww! Stupid monkey!" And pushed the monkey down.  The master took the stick and gave the monkey a blow.  Immediately the monkey came and sat down.  Only then did Jingji understand the secret to beating the master monkey.

       Justice: The mind is like a monkey.  If left unmanaged, they can be left astray and lose the right path.  So you have to learn to control it.

Pages