மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 2 November 2021

பட்டாசு வெடிக்கும் முறையும் .. முதலுதவியும்..


பட்டாசு வெடிக்கும் முறை..!!

       தீபாவளி வந்தாச்சு! புத்தாடை, பட்டாசு, பலகாரம் என வீடே அமர்க்களமாக இருக்கிறது... தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசு தான்... விதவிதமான சத்தங்கள், வண்ண வண்ண மத்தாப்புக்கள் என குழந்தைகளை மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை பட்டாசுகளுக்கு மட்டுமே உண்டு. பட்டாசுகளை எந்த அளவிற்கு நாம் மகிழ்ச்சியாக வெடிக்கிறோமோ அதே அளவிற்கு நாம் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் வெடிக்க வேண்டும்.



தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரம் :

காலை 6 முதல் 7 மணி வரை

இரவு 7 முதல் 8 மணி வரை


பட்டாசு வெடிக்கும் முன்...

     அட்டைப்பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகள் பற்றி தெரிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    பெரியவர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.

     பட்டாசு வெடிக்கும்போது ஒரு பக்கெட் மணல், ஒரு பக்கெட் தண்ணீர் அருகில் இருக்க வேண்டும்.

பட்டாசு வெடிப்பவர்கள் கட்டாயம் காலணி அணிந்து கொள்ளுங்கள்.

     பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக முதலில் மெழுகுவர்த்தி, ஊதுபத்தி ஆகியவற்றை பட்டாசு பெட்டிகளுக்கு சற்று தொலைவில் தள்ளி வைத்து விடவும். வெடிகளைப் பற்ற வைக்கும்போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது.

பெண்கள் தலைமுடியை கட்டிக் கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும்.

பட்டாசுகளைக் கொளுத்தும்போது காட்டன் ஆடைகள் அணிவது நல்லது.

       வெடிகளை கையில் வைத்தோ, அருகில் வைத்தோ வெடிக்க வேண்டாம். பாதுகாப்பான தொலைவில் இருந்து வெடிக்கவும்.

      பட்டாசு வெடிக்கவில்லை என்று எட்டிப்பார்க்க வேண்டாம். புஸ்வானம், மத்தாப்பு போன்றவை திடீரென்று வெடித்துவிடும்.

சானிடைசரை பயன்படுத்திய பிறகு பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.


தீக்காயம் ஏற்பட்டால்... முதல் உதவிக் குறிப்புகள் :

     நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். பேனா இங்க், எண்ணெய் ஆகியவற்றை ஊற்றக்கூடாது.

   தீக்காயத்தின் மீது காட்டன் வைக்காதீர்கள். காயத்தில் பஞ்சு ஒட்டிக்கொள்ளும்.

    சுத்தமான துணியினால் காயம்பட்ட இடத்தைச் சுற்றி உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

கொப்புளம் ஏற்பட்டால் உடைக்காதீர்கள்.

       ஒருவேளை உங்கள் மீது தீப்பிடித்தால் ஓடாமல் தரையில் உருண்டு தீயை அணைக்க முற்பட வேண்டும்.

      பட்டாசின் சிறு துணுக்குகள் கண்களில் படுவதோ, பட்டாசு புகையினால் கண் சிவந்து விடுதல், கண்ணில் நீர் வடிதல், எரிச்சல் போன்றவை ஏற்படலாம். அப்படி இருந்தால் கண் மருத்துவரிடம் உடனடியாக பரிசோதிக்க வேண்டும்.

    பாதுகாப்பாக பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுவோம்..!!


Pages