A dog saw a cat on a wall and thought to itself "Oh, how lucky is the cat. I wish to climb on the wall". Next, it sees a goldfish swimming in an aquarium. It thought how nice it would be to swim in the cold water.
Just then, the fish says to it, "The grass looks so warm and nice. I like to lie in it". Shortly after a sparrow passes by and says "Oh! I would like to play all day in the sun. And If I am a dog then I will play the whole day".
On hearing all this, the dog realizes how lucky it was and it started appreciating all the things it had.
Moral: It always seems that the grass is always greener on other side. But the joy lies in appreciating what we have.
நாய் ஒன்று பூனை சுவர் மீது இருப்பதை பார்த்து, தனக்குள் 'ஓ, பூனை எவ்வளவு அதிர்ஷ்டசாலி. சுவரில் ஏற விருப்பமாக உள்ளது" என்று நினைத்துக் கொண்டது. அடுத்து தங்க மீன் ஒன்று மீன் தொட்டியில் நீந்திக் கொண்டிருப்பதை பார்த்து, குளிர்ந்த நீரில் நீந்துவது எவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைத்தது.
அப்போதே, மீன் நாயிடம், 'புல் மிகவும் சூடாகவும் நன்றாகவும் இருக்கிறது. எனக்கு அதில் படுக்க வேண்டும் போல் இருக்கிறது" என்றது. சிறிது நேரத்திலே சிட்டுக் குருவி ஒன்று அங்கே கடந்து செல்லும் போது, 'ஓ, நான் சூரியனில் நாள் முழுவதும் விளையாட விரும்புகிறேன். நான் ஒரு நாயாக இருந்தால், நான் நாள் முழுவதும் விளையாடுவேன்" என்றது.
இதையெல்லாம் கேட்ட பிறகு, தான் எப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்து, அதனிடம் உள்ள அனைத்தையும் பாராட்டிக் கொண்டது.
நீதி : இக்கரைக்கு அக்கரை பச்சையாக தான் தெரியும். நம்மிடம் உள்ளதை பாராட்டுவதில் தான் மகிழ்ச்சி உள்ளது.