பூமி பந்தின் வடிவம் உருண்டை என்பதை நாம் அறிந்ததே. இதன் ஒரு பகுதி பகலாக இருக்கும்போது, மற்றொரு பகுதி இரவாக இருக்கும். கிரீன்விச் மைய நேரப்படி 13 முன்னதாக நியுசிலாந்தில் நேரம் இருக்கும்.
இந்தியாவிற்கும், நியூசிலாந்திற்கும் நேர வேறுபாடு ஏறக்குறைய +7:30 மணிகள் ஆகும்.
எனவே உலகில் ஆங்கிலப் புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடாக நியூசிலாந்து உள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாடப்படும். ஜனவரி 1ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்காவில் புத்தாண்டு பிறக்கும். நாளை மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக பேக்கர் தீவு மற்றும் ஹாவ்லாந்து தீவு இருக்கும்.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
www.alamaravizhuthugal.net