சீடன் ஒருவன் தன் குருவிடம் சென்றான். "குருவே, உங்களிடம் சுற்றுக் கொள்ளும் வாள் பயிற்சியுடன் கூடவே ஒரே சமயத்தில் குதிரைப் பயிற்சியும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்", என்றான்.
சீடனைக் கூர்ந்து கவனித்த குரு "வலது கண்ணால் இடது புற மரக்கிளையில் உள்ள புறாவையும், இடது கண்ணால் வலது மரக்கிளையில் உள்ள பருந்தையும் பார்" என்றார்.
சீடனுக்கு குருவின்மீது கோபம் வந்தது. "இரண்டு கண்களால் ஒரே நேரத்தில் இரு வேறு பொருள்களைப் பார்க்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றான். "அப்படி என்றால் நீ கேட்டதும் சாத்தியமாகாது" என்றார் குரு புன்னகையுடன்.
நீதி:
இரண்டு முயல்களை ஒரே சமயத்தில் விரட்டிப் போகும் வேட்டைக்காரனால் இரண்டு முயல்களையும் பிடிக்க முடியாது.
One of the disciples went to his guru. "Guru, I want you to learn horse training at the same time as sword training."
The Guru looked at the demon and said, "Look at the dove in the left outer branch with the right eye and the hawk in the right branch with the left eye."
The demon became angry with the Guru. '' Did you not know that two eyes cannot see two different objects at the same time? " Then it will not be possible for you to ask," said the Guru with a smile.
Justice:
Two rabbits cannot be caught by a hunter who chases two rabbits at the same time.