மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 18 January 2022

குரு சொன்ன அறிவுரை



        ஒரு நாட்டின் மன்னர் தனது மகனை குருகுலத்திற்கு கல்வி கற்க அனுப்பி வைத்தார். அவனும் குருகுலத்தில் மன்னர் மகன் என்ற அகந்தையை விடுத்து அனைத்து சீடர்களுடனும் ஒற்றுமையாக பழகி வந்தான். குரு சொல்லும் அனைத்து கட்டளைகளையும் மிகுந்த பணிவுடன் செய்து வந்தான். இப்படியே குருகுலத்தில் பல ஆண்டுகளாக கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் கல்வி பயின்று முடித்து தன்னுடைய அரண்மனைக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது.



      மன்னரின் மகன் குருகுலத்தில் இருந்து விடைபெற்று தன் நாட்டிற்கு செல்லும் முன் குருவிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றான். அப்போது மன்னரின் மகனைப் பார்த்து, குரு, நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!! என்று அறிவுரை கூறினார். மன்னனின் மகனும், சரி சுவாமி! நான் முறமாகவே இருக்கிறேன் என்றான்.



      இதன் பொருள் என்னவென்று மன்னனுக்கு புரியவில்லை. தன் மகனிடம் கேட்டார் மன்னர். அதற்கு அவருடைய மகன், சல்லடை, நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கழிவுகளையும், கல்லையும் மண்ணையும் தான் வைத்துக் கொள்ளும். ஆனால் முறமோ, பதர், கல், மண் போன்றவற்றைக் கீழேத் தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும். இது தான் குரு சொன்ன அறிவுரை என்று கூறினான். குரு கூறிய அறிவுரைப்படியே மன்னரின் மகன் கடைப்பிடிக்கலானான்.


நீதி :
நல்ல விஷயங்களை மட்டும் மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.


In English: 

       The king of a country sent his son to study at the Gurukul. He also got rid of the pride of being the king's son in the Gurukul and became accustomed to unity with all the disciples. He obeyed all the orders given by the Guru. Thus he was educated in the Gurukul for many years. One day the day came when he had to finish his education and go to his palace.



     The king's son said goodbye to the guru and went to the guru to seek his blessings before leaving for his country. Then look at the king's son, Guru, be like me once! Don't be like a sieve !! Said the counsel. King's son, OK Swami! I said formally.


         The emperor did not understand what this meant. The king asked his son. For that his son would sift through the sieve, all the good stuff, and just keep the unnecessary waste, stone and dirt. But once again, the fear, the stone, the soil, etc. will be pushed down and only the good things will be retained. He said that this was the advice given by the Guru. The king's son obeyed the guru's instructions.


Justice:
Only good things should be kept in mind.


Pages