மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 22 January 2022

உண்மையைப் பேசிய விவேகானந்தர்

       சுவாமி விவேகானந்தர் பள்ளியில் படிக்கும் போது, இடைவெளி நேரத்தில் அவருடைய நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் எல்லோரும் அவருடைய பேச்சை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.


        இதற்கிடையில் இடைவேளை முடிவடைந்து, வகுப்புக்குள் ஆசிரியர் நுழைந்து பாடம் நடத்த தொடங்கினார். சிறிது நேரம் கழித்து ஆசிரியர் மாணவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கண்ட அவர், அந்த மாணவர்கள் பின்னால் உட்கார்ந்திருப்பதையும் கவனித்தனர்.


       ஆசிரியர் கோபமடைந்து, வகுப்பில் அவர் பாடம் நடத்தியதை பற்றி மாணவர்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார். வகுப்பில் உள்ள எவராலும் பதில் அளிக்க முடியவில்லை. சுவாமி விவேகானந்தரிடம் கேள்வி கேட்டபோது, ஒவ்வொரு கேள்விக்கும் சுவாமி விவேகானந்தர் சரியாக பதில் அளித்தார்.


       ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் பேசிய அந்த ஒரு மாணவன் யார் என்று விசாரித்தார். வகுப்பில் இருந்த அனைவரும் சுவாமி விவேகானந்தரைப் சுட்டிக்காட்டினார்கள். அவர் எல்லா கேள்விகளுக்கு பதில் அளித்ததால் அவர் தான் அந்த மாணவன் என்று நம்ப மறுத்துவிட்டார். ஆசிரியர் எல்லோரும் பொய் சொல்கிறார்கள் என்று எண்ணினார்.


         அதனால் சுவாமி விவேகானந்தரைத் தவிர எல்லா மாணவர்களுக்கும் தண்டனையை வழங்கி, பலகையின் மீது ஏறி நிற்க சொன்னார். இருப்பினும் சுவாமி விவேகானந்தர் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து பலகை மீது ஏறி நின்றார்.


       இதையெல்லாம் கவனித்த ஆசிரியர், விவேகானந்தரைத் கீழே இறங்கி வரச் சொல்லி இருக்கையில் அமரும் படி கூறினார், விவேகானந்தர் ஆசிரியர் கூறுவதை மறுத்து 'இல்லை ஐயா.. நான் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அதனால் நானும் பலகையின் மேல் நிற்க வேண்டும்' என்று பதிலளித்தார்.


நீதி : தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்வது நல்லது.

Pages