வாழைப்பழ சோம்பேறி என்றால் மிகுந்த சோம்பேறி என்று அர்த்தமாம். வாழைப்பழமானது மற்ற பழங்களை ஒப்பிடுகையில் குறைந்த உழைப்பினால் சாப்பிடக்கூடியது.
உதாரணமாக பலாப்பழம் எடுத்துக்கொண்டால் பழத்தை உண்ணுவதற்கு வெளியில் உள்ள தோலை நீக்க கடுமையாக வேலை செய்தாக வேண்டும். அதேபோல மாம்பழம் எளிமையாக உள்ளது என்று கேட்டால் மாம்பழமானது எல்லா கால நிலைகளிலும் கிடைக்காது. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய, குறைந்த அளவு ஆற்றலை செலவு செய்து உண்ண கூடிய பழமாக இருப்பது வாழைப்பழம். வாழைப்பழம் சாப்பிடுவதற்கு கூட உழைப்பதற்கு சோம்பல் கொண்டவரை வாழைப்பழ சோம்பேறி என்று குறிப்பிடுவார்கள்..
சிறிய கதை மூலம் இதை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு ஊரில் கடையில் வாழைப்பழம் வாங்க ஒருவன் வந்தான்.
வாழைப்பழம் என்ன விலை என்று கேட்டான்.கடைக்காரன் ஒரணா என்று சொன்னான் (1/16₹). வாங்க வந்தவன் உரித்து திங்க வசதியாக உரித்த வாழைப்பழம் கிடைக்குமா என்று கேட்டான்.
அதற்கு கடைக்காரன் வழைப்பழம் ஒரணா, உரித்தது ஒன்னரையணா, அதிலேயே உரித்து மென்று திண்பதற்கு வசதியாக மசித்தது இரண்டணா என்றான்.
இவன் மூன்றணா தருகிறேன். வாயிலே ஊட்டிவிடு என்றான்.
கடைக்காரனோ ஒரணா குறைத்து தருகிறேன். நீயே எடுத்து கொண்டு காசை கல்லாப்பெட்டியில் போடு என்றான்.
அவனுக்கு தோலுறித்து உண்பதற்கு சோம்பல். இவனுக்கு காசை வாங்கி கல்லாப்பெட்டியில் போடுவதற்கு சோம்பல்.
இவர்களைப் போன்றவர்களைத்தான் வாழப்பழ சோம்பேறிகள் என்று சொல்கின்றனர்.