மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday 16 March 2022

தமிழ் பழமொழிகள்


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சியானது.


பெண் குலப் பெருமை - பெண் குழந்தைகளை வளர்க்கும் அருமை.

தன்னை அறிவது அறிவு: தன்னை மறப்பது மடைமை விரும்புவது கிட்டவில்லையானால், கிடைத்ததை விரும்ப வேண்டும்.

அழகிய பெண்ணும், கிழிந்த ஆடையும் எந்த ஆணியிலும் மாட்டிக்கொள்ளும்.

வானில் அழகு விண்மீன்களில் உள்ளது; பெண்ணின் அழுகு கூந்தலில் உள்ளது.

உள்ளம் நிறைந்து விட்டால் உதடும் பேசும்.

ஆசை கண்ணை குருடாக்குகிறது. காதை செவிடாக்குகிறது.

சாபங்கள் - கோழிக்குஞ்சுகளைப் போன்றவை; அவை வீட்டுக்குத் திரும்பி வந்து விடும்.

நாணமில்லாத பெண், உப்பில்லாத உணவு மாதிரி.


பணமில்லாத வியாபாரி நிலமில்லாத விவசாயி மாதிரி.

வானத்தை நோக்கி ஒருவன் துப்பினால் அது அவன் முகத்திலேயே விழும்.

ஒரு வருஷத்தில் பணக்காரனாக ஆசைப் படுகிறவன் ஆறு மாதத்தில் தூக்கிலிடப்படுவான்.


பணம் இருந்தால் உன்னை உனக்குத்தெரியாது; பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது.

முட்டாள் ஒரு முடிவு செய்வதற்கு முன் சந்தையையே விற்று விடுவான்.

பெண்ணின் வாழ்வு என்பது கணவனின் அன்பே.

ஒரு மதுக் கிண்ணமும் பெண்ணும் அருகில் இருந்தால் ஒருவனுக்குப் பொழுதுபோவதே தெரியாது.

இதயம் சாவதைவிட கண்கள் சாவது மேலானது.

குளிர் வந்து விட்டால், அழுக்குத்துணியும் அவசியம் ஆகும்.

அன்னதானத்திற்கு நிகர் என்ன தானம் உள்ளது.


அதிகாரம் இல்லாவிட்டாலும் பரிகாரம் வேண்டு.

ஆபத்துக்காகாத மனைவியை அழகுக்கா வைத்திருப்பது.

ஆயிரம் நட்சத்திரங்கள் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

ஆகாத பஞ்சாங்கத்திற்கு அறுபது நாழிகையும் தியாக்கியம்.

ஏற முடியாத மரத்திலே எண்ணாயிரம் மாங்காய் !

ஐப்பசி மாதம் அழுகைத் தூறல் ! கார்த்திகை மாதம் கனத்த மழை !

ஒன்றைத் தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.

ஒரு நாளும் இல்லாத திருநாள்.

ஒரு பணம் கொடுத்து அழச் சொன்னால் ஒன்பது பணம் கொடுத்து ஒயச் சொல்லணும்.

கருவாட்டுக்காரனைக் கட்டி வைத்துப் பார்க்கிலும் கந்தப் பொடிக்காரன் கைக்குட்டை மேலானதல்லவா ?


கொட்டினால் தேள் கொட்டாவிடில் பிள்ளைப் பூச்சி.

எட்டிக் குடும்பியைப் பிடி இறங்கி காலைப் பிடிக்கிறவன் போல்.

விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆகும் ?

மதியார் வாசலை மிதிக்க வேண்டாம்.

தெருச்சண்டை கண்ணுக்கினிமை.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.

மனிதன் மதுவைக் குடிக்கிறான்; பின்னர் மது மனிதனைக் குடிக்கிறது.

பறவைக்கு பயந்து விதைக்காமல் போகாதே.

காதலன் கண்ணுக்கு அம்மைக் குழிகள் கன்னக் குழிகள்.

சிங்கம் இல்லாத இடத்தில் நரி சிம்மாசனம் ஏறும்.


வக்கீல் வீட்டின் கூரைகள் வழுக்காடிகளின் தோல்களால் வேயப்பட்டிருக்கின்றன.

அடக்கி வைத்திருப்பதை விட திறந்து விடுவது மேலானது.

உழைத்து பழக்கமில்லாதவன் உழைப்பை விரும்ப மாட்டான்.

பணம் உலகத்தைக் கவரும் அழுகு உள்ளத்தைக் கவரும்.

உனது நாவிற்கு விலங்கிடு இன்றேல் அது உனது காலிற்கு விலங்கிடும்.

அழகான பெண்ணின் புன்னகை பணப்பையின் கண்ணீர் ஆகும்.

இறந்து ஒரு கோடி தேடுவதைக் காட்டிலும், இருந்து ஒரு காசு தேடலாம்.

ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.

ஓட்டக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

வார்க்க ஆளில்லாவிட்டாலும் கச்சை கட்ட ஆளுண்டு.


கங்கையிலே முழுகினாலும் காக்கை அன்னம் ஆகாது.

மங்கை களங்கமானால் கங்கையில் குளிப்பாள் கங்கை களங்கமானால் எங்கே குளிப்பாள் ?

கணக்கறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கிறாது.

முதுகில் புண்ணிருக்கிறவன் செடியில் நுழைவானா ?

வேசி நேசம் , விளைப்பது நாசம்.

அரசனை நம்பி புருஷனை இழந்தான்.

முடவனை மூர்க்கன் கொன்றால், மூர்க்கனை முனிதான் கொல்லும்.

ஐந்து வயதாலும் அவசரமாகாது பத்து வந்தாலும் பதட்டமாகாது .

சொர்க்கத்திற்குப் போயும் சோற்று பிச்சை எடுப்பது போல.

Pages