மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 18 March 2022

Proverbs english and tamil



1. Don't judge a book by its cover.

புறத்தோற்றம் கண்டு மயங்காதே.


2. Better cut the shoe that pinches the foot.

துஷ்டனைக் கண்டால் தூர விலகி விடு.

3. All’s well that ends well.

நல்ல தொடக்கம் நல்ல முடிவைத்தரும்.

4. A liar is not believed when he speaks the truth.

பொய்யன் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை.

5. A danger forseen is half avoided.

முன் அறிந்த ஆபத்து பாதி தவிர்த்தது போல்.

6. A single swallow can not make a summer.

தனி மரம் தோப்பாகாது.

7. Writing the word sugar will not be sweet.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

8. Some are able because they think they.

உயர்வாக கருதினால் உயர்ந்திட முடியும்.

9. The spinning world makes everything rotate.

சுழலும் உலகம் அனைத்தையும் சுழற்றுகிறது.

10. Sadness and gladness succeed each other.

அல்லல் ஒரு காலம்.செல்வம் ஒரு காலம்.


11. No leaf moves but God wills it.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

12. Beauty is not a legacy.

சேற்றில் முளைக்கும் செந்தாமரை.

13. cracked bell can never sound well.

உடைந்த சங்கு பரியாது.

14. Chew your food well and live a long life.

நொறுங்கத் தின்றால் நூறு வயது.

15. A wise enemy is better than a foolish friend.

முட்டாள் நன்பனைவிட கற்றறிந்த பகைவனே மேல்.

16. Try and try again you will succeed at last.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

17. Talking more is not wisdom.

அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல.


18. What is one man's meal is another man's poison.

பூனைக்கு கொண்டாட்டம், எலிக்கு திண்டாட்டம்.


19. Better one word in time than two afterward.

வேலை அறிந்து பேசு,நாளை அறிந்து பயணம் மேற்கோள்.


20. The leopard cannot change its spots.

எட்டிக்கு பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.


21. Work will go on at any cost.

அடாது மழை பெய்தாலும்,விடாது நாடகம் நடக்கும்.


22. The bearer knows the burden.

சுமப்பவனுக்குத்தான் தெரியும் பாரம்.


23. Pride goes before a fall.

அகம்பாவம் அழிவை தரும்.



Pages