மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 11 November 2022

ஜவஹர்லால் நேருவும் - குழந்தைகளும்



பேச்சு 1:
    இந்தியாவின் முதல் பிரதமரான நேரு குழந்தைகளுடன் மிகவும் அன்பாக பழகக்கூடியவர். குழந்தைகளால் நேரு மாமா என்று அன்போடு அழைக்கப்பட்டவர். எப்போதும் ஒரு ரோஜா பூவை தன் சட்டையில் குத்தி வைத்திருப்பார்.


      குழந்தைகளுக்கான மேற்கோள்களையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதில் ஒரு புகழ்பெற்ற பொன்மொழி தான், “இன்றைய குழந்தைகள்தான் நாளைய தலைவர்கள்” என்று ஜவஹர்லால் நேரு கூறியது. அவர் மாணவர்களுக்காக பல கல்லூரிகளையும், பல உயர்கல்வி நிறுவனங்களையும் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு உருவாக்கினார்.


        இளைய தலைமுறையே எதிர்கால வலிமையான இந்தியாவை உருவாக்கும் என்ற கொள்கையின் அடிப்படையில் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பல நல்ல செயல்களை செய்தார் . இதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஜவகர்லால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.


பேச்சு 2:
இந்திய அரசியலமைப்பின் படி, குழந்தைகளின் உரிமைகள் பின்வருமாறு:

* 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமை.

* எந்தவொரு அபாயகரமான வேலையிலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.

* குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான உரிமை.

* துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.

* அவர்களின் வயது அல்லது உடல் வலிமைக்கு பொருந்தாத தொழில்களை அணுகுவதற்கான பொருளாதாரத் தேவையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.

* ஆரோக்கியமான வளர்ச்சிக்கான சம வாய்ப்புகள் மற்றும் வசதிகளுக்கான உரிமை.

* சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான உரிமை மற்றும் சுரண்டலுக்கு எதிராக குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது


நிகழ்வு 1
     குழந்தைகள்மீது கொள்ளைப் பிரியம்கொண்ட நேருஜி பிரதமராக இருந்தபோது ஒருமுறை மதுரைக்கு வந்திருந்தார். மதுரையில் அதிகாரிகளுடன் காரில் சென்றுகொண்டிருந்த போது, ஒரு வியாபாரி பலூன் விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே காரை நிறுத்தச் சொல்லி, நிறைய பலூன்களை வாங்கி, அங்கே இருந்த குழந்தைகளுக்குக் கொடுத்தார். அதோடு நிறுத்திவிடவில்லை. குழந்தைகளோடு சேர்ந்து விளையாட ஆரம்பித்துவிட்டார். பலூன்களை எடுத்து ஊதி, குழந்தையாகவே மாறிவிட்டார்.


நிகழ்வு 2
 நேரு, புகழின் உச்சியில் இருந்த காலம். அப்போது அவரை எதிர்த்துப்பேச ஆளே கிடையாது. இந்த நிலையில், கொல்கத்தாவிலிருந்து வெளிவந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஓர் எழுத்தாளர் துணிச்சலுடன், “நேருவின் போக்கு சர்வாதிகாரமாக இருக்கிறது. நாளை அவர் சர்வாதிகாரியாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தயவுசெய்து யாராவது அவரைத் தட்டிக்கேளுங்கள்” என்று எழுதியிருந்தார். அதை எழுதியவர் யார் தெரியுமா? நேருதான். வேறு ஒரு புனைபெயரில் எழுதியிருந்தார்.


நிகழ்வு 3
  நேரு, எப்போதும் தன் சட்டை பட்டன் துவாரத்தில் ஒரு ரோஜாப்பூவை வைத்திருப்பார். இந்தப் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா? ஒருமுறை நரசிங் மேத்தா என்ற எம்.பி., நேருவைப் பார்க்கச் சென்றிருந்தார். நரசிங் மேத்தா சட்டையில் ஒரு ரோஜா பூ செருகியுள்ளதைப் பார்த்து ரசித்துப் பாராட்டினார் நேரு. உடனே நேரு, அருகிலிருந்த ரோஜா செடியில் உள்ள பூவை எடுத்து, தானும் தன் சட்டை பட்டனுக்குள் செருகிக்கொண்டார். அதுவே, பின்னாளில் அவர் அடையாளமாகி விட்டது.


நிகழ்வு 4
     நேரு வெளியூர் கிளம்பினார். போய் வருவதற்குக் கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஆகும். இதற்காக 50 புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டார். இதைப் பார்த்த மகள் இந்திரா, “அப்பா, இத்தனை புத்தகங்களையும் உங்களால் இந்தப் பயணத்தின் போது படித்து முடித்துவிட முடியுமா?'' என்று ஆச்சர்யமாகக் கேட்டார். “படிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், இந்தப் புத்தகங்கள் எல்லாம் என்னுடன் இருந்தால், இந்தப் புத்தகங்களை எழுதிய அறிஞர்கள் எல்லோரும் என்னுடன் இருப்பதுபோல உணர்வேன். அதுதான் எனக்குச் சக்தி தரும்'' என்றார். அந்த அளவுக்குப் புத்தகப் பிரியர் நேரு.


நிகழ்வு 5
 1940-ம் ஆண்டு, மும்பையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார் நேரு. திடீரென்று மழை பெய்யத் தொடங்கிவிட்டது. ஆனாலும் லட்சக்கணக்கான மக்கள் நேருவின் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர், நேருவின் தலைக்கு மேலே குடை பிடித்தார். ``மக்கள் மழையில் நனையும்போது எனக்கு மட்டும் குடை எதற்கு?'' என்று சற்று கோபமாகக் கேட்டார். பிறகு மக்களிடம் ஒலி பெருக்கியில், ``இவர் எனக்குக் குடை பிடிக்கவில்லை. இந்த ஒலி பெருக்கிக்குத்தான் குடை பிடிக்கிறார்'' என்று சொன்னபோது ஆரவாரம் அடங்க பல நிமிடங்கள் ஆனது.



சிறப்புகள்: 
      இந்தியாவின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல, உலக அமைதிக்காக வும் பாடுபட்டார் ஜவஹர்லால் நேரு. பஞ்சசீலக் கொள்கை, அணி சேராக் கொள்கை எனத் தொடர்ந்து அமைதி முயற்சியில் ஈடுபட்டார். எல்லைப் பிரச்னைகள், ஆக்கிரமிப்புகள் போன்றவற்றையும் பேச்சுவார்த்தை மூலம் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று ஐ.நா சபையின் சட்டப் பிரிவுக்குக் காரணமாக இருந்தவர் நேரு. உலக நாடுகளிடையே ஒற்றுமை ஓங்கவும், சமாதானம் நிலவவும் பாடுபட்ட நம் தலைவர் நேரு, நம் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான `பாரத ரத்னா' வழங்கி கௌரவிக்கப்பட்டார். `ஆசிய ஜோதி', `சமாதானப்புறா' என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்டார்.


குழந்தைகள் தினம் :
        பண்டிட் நேருவின் கூற்றுப்படி, குழந்தைகள் நாட்டின் புத்திசாலித்தனமான எதிர்காலம். சரியான கல்வி, கவனிப்பு மற்றும் முன்னேற்றத்தால் மட்டுமே நாம் அவர்களுக்கு ஒரு புதிய நல்ல வாழ்க்கையை வழங்க முடியும். ஆகையால், பண்டிட் ஜவஹர்லால் நேரு (1964) இறந்த பிறகு, அவரை கௌரவிப்பதற்காகவும், அவரை நினைவுகூர்வதற்காகவும், இந்தியாவில் அவர் பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். 


      எனவே, சாச்சா நேருவின் ஆழ்ந்த அன்பும் குழந்தைகளிடம் தூண்டுதலும் அவரது பிறந்தநாளில் குழந்தைகள் தினத்தை கொண்டாட பெரிய காரணம். எதிர்காலத்தில் வளர்ந்த நாகரிகத்தை உருவாக்கும் என்பதால் குழந்தைகள் நாட்டின் உண்மையான சக்தி என்று அவர் கூறினார்.


நம் கடமை:
         நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பொறுத்தது. அவை சரியான வழியில் உருவாகாவிட்டால், நாட்டின் எதிர்காலம் பாழாகிவிடும். குழந்தைகளைப் புறக்கணிக்கும் நபர்கள் இதைப் பற்றி சிந்திக்க இந்த நாளில் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். ஒட்டுமொத்த சமுதாயமும் குழந்தைகளுக்கு அதன் கடமை மற்றும் பொறுப்பு பற்றி சிந்திக்க வேண்டும். கடந்த காலங்களில் என்ன செய்யப்பட்டுள்ளது மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் குழந்தைகளுக்கு என்ன செய்ய முடியும் என்பதை பகுப்பாய்வு செய்வது அவசியம்

Pages