மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 22 March 2023

வண்ணத்துப்பூச்சியின் கதை


           என் பெயர்  வண்ணத்துப்பூச்சி. நான் தினமும் பள்ளிக்கு செல்வேன். என் அப்பா, அம்மா எனக்கு மிகவும் பிடிக்கும்.


      ஒரு நாள் பள்ளிக்கு போகும்போது வழியில் ஒரு அண்ணாவை பார்த்தேன். அந்த அண்ணனுக்கு பெரிய கண்கள். நீளமான உதடு. அந்த அண்ணாவை பார்த்து நான் மிகவும் பயந்தேன். ஏனென்றால் அந்த அண்ணா என்னை பிடித்து நசுக்கி விடுவார்கள் என்று நான் பயந்தேன். அப்படி செய்தால் என்னால் என்ன செய்ய முடியும்? நான் பலசாலி இல்லையே...


     மறுநாள் என் அப்பாவிடம் கேட்டேன். "அப்பா நான் ஏன் வண்ணத்துப்பூச்சியாக பிறந்தேன்." அதற்கு என் அப்பா "இல்லை மகளே,  கடவுள் நம்மை காரணம் இல்லாமல் படைக்க மாட்டார்கள்." என்று சொன்னார்கள். எனக்கு புரியவில்லை. நான் யோசித்து பார்த்தபோது கடவுள் நம்மை இந்த உலகத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றுதான் படைத்திருப்பார்கள்.


       மறுநாள் நான் பள்ளிக்கு போகும்போது, அந்த அண்ணன் எதிரில் வந்து நின்றான். நான் ஒரு நிமிடம் யோசித்தபோது,  நான் என் பயந்து ஓட வேண்டும். நான் எந்த தப்பும் செய்யவில்லையே..  அதனால் நான் பயப்படவில்லை.  நான் அந்த அண்ணாவை கண்டு கொள்ளவில்லை. என்னை பிடிக்க முயற்சித்த பொழுது, என் இறகுகளை வைத்து அந்த அண்ணாவை அடித்துவிட்டு, கண்மூடி பறந்து விட்டேன். பள்ளிக்கு வேகமாக சென்று விட்டேன்.


      மறுநாள் நான் பள்ளிக்கு போகும்போது, அந்த அண்ணா என் எதிரில் இல்லை. இது என்னை மிகவும் யோசிக்குமாறு செய்தது. எனக்கு ஒரு விஷயம் புரிந்தது நாம் சாதிக்கும் போது, ஆயிரம் தடைகள் வரும். பயப்படாமல் அதையெல்லாம் அலைபோன்ற அடித்து சென்றால் தான் நம்மால் சாதிக்க முடியும் என்று மனதில் தோன்றியது. நான் என்னுடைய தடைகளை தாண்டி சாதிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். நமது ஒரே குறிக்கோள் கல்வி மட்டுமே அதை நன்றாக பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று உறுதி எடுத்து, என் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். எனவே இன்று முதல் என்னுடைய கவனம் எங்கும் திசை திரும்பாது. யாரைக் கண்டும் பயப்படாது. என் மனம் சலனப்படாது. கல்வி ஒன்றே என்னுடைய குறிக்கோள்.

                                    

         இப்படிக்கு 

அழகான வண்ணத்துப்பூச்சி 


     நீங்களும் கல்வி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வில் முன்னேற உறுதி கொள்ளுங்கள்.. நன்றி.


- S. பிரியதர்ஷினி,

வகுப்பு 8,

ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி,

பெரியவரிகம்.


Pages