மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 22 March 2023

வண்ணத்துப்பூச்சியும், நாமும்

 


         வண்ணத்துப்பூச்சி மிக அழகாக இருக்கும்.  அது பல வண்ணங்களில் இருக்கும். வண்ணத்துப்பூச்சியும், நாமும் ஒன்றே. மாணவர்களாகிய நாமும் பல இன, மொழி, மதம், நிறம் என பல பிரிவுகளாக இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை எனும் வண்ணத்தில் அனைவரும் சமமாக இருப்போம்.

 

          வண்ணத்துப்பூச்சி நான்கு பருவ நிலைகளை கொண்டது. அதுபோல நமக்கும் குழந்தை பருவம், பள்ளிப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் என நமது வாழ்வில் இருக்கும். வண்ணத்துப்பூச்சிக்கு ஆறு கால்கள் இருக்கும். அதுபோல நமக்கும் ஆறு அறிவு இருக்கின்றன. அந்த ஆறறிவு திறன்களையும் அந்தந்த பருவ நிலைகளில் சிந்தித்து செயல்படுத்தி, நாம் செல்வமானால் ஒரு செழுமையான வலிமையான வீடாகவும், நாடாகவும் இருக்கும். 


         வண்ணத்துப்பூச்சி பூவிலிருந்து தேன் எடுக்கும். அது போல நம் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியனும் தேனை, புத்தகம் என்னும் பூவிலிருந்து எடுத்து நம் வாழ்வில் பயன்படுத்தி, இவ்வுலகில் அனைவரும்  சந்தோஷமாக இருப்போம். வண்ணத்துப்பூச்சிக்கு கண் இமைகள் இல்லை. அது போல நம்மிடையே வேற்றுமைக்கு இடமே இல்லை.


      மனதில் நல்ல எண்ணங்களை வளர்ப்போம். வண்ணத்துப்பூச்சி மிக அழகாக சுதந்திரமாக வானத்தில் பல தடைகளைத் தாண்டி பறந்து செல்லும். அதுபோல மாணவர்களாகிய நாமும் பல தடைகளை தாண்டி, படித்து நம் வீட்டிற்காகவும், நம் நாட்டிற்காகவும் அயராத உழைத்து சேவைகள் செய்து, மென்மேலும் பல சோதனைகளை சாதனைகளாக மாற்றி வானில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல ஜொலிப்போம். அவரவர் வாழ்வில் சந்தோசமாக இருப்போம். அனைவருக்கும் வழிகாட்டும் நட்சத்திரம் போல் இருப்போம்.


M.மோனிகாஸ்ரீ 

வகுப்பு 8

ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி,

பெரியவரிகம் 



Pages