என் பெயர் சின்ன பட்டாம்பூச்சி. நான் ஒரு நாள் என் நண்பர்களுடன் விளையாடச் சென்றேன். ஆனால் என் நண்பர்கள் என்னுடன் விளையாடவில்லை. காரணம் நான் மிகவும் சிறிய பூச்சியாக இருந்தேன். அதனால் என்னுடைய நண்பர்கள் என்னை கேலி செய்தார்கள். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.
நான் கடவுளிடம் கேட்டேன் ஏன் கடவுளே என்னை சிறியதாக படைத்தீர்கள்?. அதற்கு கடவுள் இல்லை, சிறிய பட்டாம்பூச்சியே.. உனக்கு காரணம் ஒரு நாள் தெரியும் என்று கூறினார். அந்த ஒரு நாள் வந்தது. பெரிய புயல் வந்தது. அனைத்து விலங்குகளையும் அடித்து சென்றது. என்னுடைய இனத்திற்கு ஒளிந்து கொள்ள இடமே இல்லை. என் கண்ணிற்கு ஒரு மரம் தெரிந்தது. அந்த மரத்தின் நடுவில் சிறிய பொந்து இருந்தது. அதில் நான் சென்று ஒளிந்து கொண்டேன். ஆனால் என்னுடைய நண்பர்கள் அந்த சிறிய ஓட்டையினுள் வர முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தார்கள்.
அந்த நிமிடத்தில் கடவுள் சொன்ன வார்த்தை எனக்கு புரிந்தது. ஏனென்றால் நாங்கள் எல்லோரும் வண்ணத்துப் பூச்சிதான். ஆனால் நான் மட்டும் அந்த சிறிய பொந்திற்குள் சென்றுவிட்டேன். மற்றவர்களால் வர முடியவில்லை. புயலில் அடித்து சென்று விட்டார்கள். என் நண்பர்கள்.. என் நண்பர்களை நினைத்து நான் மிகவும் கவலை பட்டேன். கடவுளே என் நண்பர்களைக் காப்பாற்று... மனமுருகி வேண்டினேன்.
எனக்கு என்ன புரிந்தது என்றால்... யாரையும் உருவத்தை வைத்து கேலி செய்யக்கூடாது. பிறகு என் நண்பர்களை தேடி பறந்து சென்றேன். புயல் காற்றின் விளைவு அப்பப்பா... அவர்கள் எல்லோரும் ஒரு குகையில் அடைக்கலம் தேடி இருந்தார்கள். அவர்கள் என்னை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார்கள். சிறிய பட்டாம்பூச்சியே இனி நாங்கள் உன்னை கேலி செய்ய மாட்டோம். எனக்கு மிகுந்த சந்தோஷம். இனி எல்லோரும் என்னை மகிழ்ச்சியுடன் விளையாட்டில் சேர்த்துக் கொள்வர்..
உன்னை தாழ்வாக நினைத்து வருத்தம் கொள்ளாதே.. நண்பா...
நம்பிக்கையுடன் செயல்படு. காலம் நம் பக்கம் திரும்பும்...
M. பிரியங்கா,
வகுப்பு 8,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
பெரியவரிகம்.