மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 9 April 2024

யுகாதி அன்று எந்த கடவுளை வணங்க வேண்டும்



யுகாதி என்றால் என்ன?
        யுகாதி அல்லது உகாதி எனப்படம் பண்டிகை தெலுங்கு, கன்னட மற்றும் மகாராஷ்டி மாநிலங்களில் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் வட மாநிலங்கள் பலவற்றிலும் பலவிதமான பெயர்களில் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. யுகாதி என்ற சமஸ்கிருத சொல்லுக்கு (யுகம்+ஆதி) ஒரு யுகத்தின் அல்லது ஆண்டின் துவக்கம் அல்லது புதியவற்றின் துவக்கம் என்று பொருள். பங்குனி மாதம் பிரதமை திதியிலேயே யுகாதி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு யுகாதி பண்டிகை ஏப்ரல் 09ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 2024 யுகாதி ஆண்டிற்கு க்ரோதி என்று பெயர்.



யுகாதி அன்று எந்த கடவுளை வணங்க வேண்டும்?
          இந்து புராணங்களின் படி, யுகாதி அன்று தான் பிரம்ம தேவர், உலகை படைக்க துவங்கி, அனைவரின் தலையெழுத்தையும் எழுதியதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் இது புதியவற்றை துவங்கும் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இது பிரம்ம தேவருக்கு நாளாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் யுகாதி அன்று காக்கும் கடவுளான பெருமாளை வழிபடுவது சிறப்பு. வேத கால ஜோதிடத்தின் படி, யுகாதி, அட்ஷய திரிதியை, விஜயதசமி உள்ளிட்ட நாட்களில் துவங்கப்படும் செயல்கள் அளவில்லாத வெற்றியையும், நன்மைகளையும் தரும் என்பது நம்பிக்கை. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்கள் தான் உலகின் அடிப்படை என்பதால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் யுகாதி நாளில் வழிபடுவது சிறப்பானதாகும்.



யுகாதி பச்சடியின் பொருள் என்ன?
          யுகாதி அன்று யுகாதி பச்சடி செய்து தெய்வத்திற்கு நைவேத்தியமாக படைக்கும் வழக்கம் உள்ளது. காலையிலேயே உகாதி பச்சடி செய்து, கடவுளுக்கு படைத்து விட்டு, அன்றைய தினம் முதல் உணவாக பச்சடியை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது நியதியாக கடைபிடிக்கப்படுகிறது. யுகாதி பச்சடி, கடவுளுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுவது என்பதால் இதை சுவை பார்க்காமல் தான் செய்ய வேண்டும். புளி, உப்பு, வெல்லம், வேப்பம்பூ, புளிப்பு மாங்காய், மிளகு அல்லது மிளகாய் சேர்த்து செய்யப்படும் யுகாதி பச்சடி அனைத்து விதமான உணர்வுகளை மக்கள் சரிசமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக செய்யப்படும் உணவு பொருளாகும். இந்த ஆறு பொருட்களும் ஆறு விதமான சுவையை உடையன. ஆறு விதமான உணர்களை சமமாக கருதினால் மட்டுமே வெற்றிகரமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை குறிப்பதே யுகாதி பச்சடி செய்யப்படுவதன் நோக்கமாகும்.




வெல்லம் - மகிழ்ச்சி

மிளகு அல்லது மிளகாய் - கோபம்

வேப்பம்பூ - வாழ்வில் ஏற்படும் துயரங்கள்

உப்பு - பயம்

புளி - சவாலாக தருணங்கள்

புளிப்பு மாங்காய் - புதிய சவால்கள் மற்றும் ஆச்சரியங்கள்

Pages