முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. அருகில் ஒரு குளம் இருந்தது. அந்த குளத்தில் மீன்கள், தவளைகள் வாழ்ந்து வந்தன.
ஒருநாள் சிட்டுக்குருவி தன் குஞ்சுகளுக்கு இரை தேடி புறப்பட்டது. போகும் வழியில் அதனுடைய நண்பனைப் பார்த்தது. நண்பன் மிகவும் சோகமாக வந்தது. " நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?" என்று சிட்டுக்குருவி கேட்டது. அதற்கு நண்பன் "என் வீட்டை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த மனிதர்கள் மரத்தை வெட்டி என் வீட்டை நொறுக்கிவிட்டார்கள்" எனக் கூறியது. உடனே சிட்டுக்குருவி " ஓ.. அப்படியா. அவர்களுக்கு நல்லபாடம் அமைக்கலாம்." எனக்கூறி அங்கிருந்து கிளம்பியது.
அங்கே குளத்தில் ஒரு மனிதன் நீரை அசுத்தப்படுத்தி மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தான். அதைக் கண்டு சிட்டுக்குருவி கோபம் கொண்டது. அதற்கு ஒரு யோசனை தோன்றியது.
அனைத்து பறவைகளையும் அழைத்து கூட்டம் போட்டது. "மனிதர்கள் மரங்களை வெட்டி எடுத்து செல்கின்றனர். தண்ணீரை வீணாக்குகின்றனர். இப்படியே போனால் நமக்கு வீடும், நீரும் இருக்காது. இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்." என்றது சிட்டுக்குருவி. அனைத்து பறவைகளும் என்ன செய்யலாம் என்று யோசித்தன.
"இந்த காடு நமது வீடு. கெட்ட எண்ணத்தோடு வரும் மனிதர்களை நாம் அனைவரும் சேர்ந்து கொத்தி விரட்ட வேண்டும். யாரையும் உள்ளே நுழைய விட கூடாது" என்று முடிவு எடுத்தன.
அதன்படியே செயல்பட்டன. பின் மகிழ்ச்சியோடு இருந்தன.
கருத்து:
எப்பொழுதும் காடுகளை அழிக்கக் கூடாது. தண்ணீரையும் வீணாக்கக் கூடாது. பறவைகளிடம் அன்பாக இருக்க வேண்டும்.
நான்...
● பறவைகளைப் பாதுகாப்பேன்.
● பறவைகளுக்கு மாடியில் தண்ணீர் வைப்பேன்.
● மரங்களை வெட்டமாட்டேன்.
● விலங்குகளைத் துன்புறுத்தமாட்டேன்.
● நீரை வீணாக்கமாட்டேன்.
● நீரைப் பாதுகாப்பேன்.
..... மேற்கண்ட அனைத்தையும் உள்ளவாறு செய்வேன். மேலும் பின்பற்றி வாழ்வேன்.
இவண்.
மு. முத்தமிழன்.
வகுப்பு 7.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
பெரியவரிகம்.