ஓர் ஊரில் பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் பெரிய கிணறு ஒன்று இருந்தது. அந்த கிணற்றின் வழியில் இரண்டு சிட்டுக்குருவி தோழிகள் செல்லும் போது ஒரு நாள் தோழி சிட்டுக்குருவி சிறகு ஒடிந்து கிணற்றில் விழுந்தது. அப்பொழுது சிட்டுக்குருவி தன் தோழியைக் காப்பாற்றாமல் நீ விழ வேண்டும் என்று தான் நான் ஆசைப்பட்டேன் என்று சொல்லிக்கொண்டே பறந்து சென்றது.
மரத்திலிருந்து குரங்கு ஒன்று வந்து கிணற்றில் இருந்த அந்த சிட்டுக்குருவியை காப்பாற்றியது. சிட்டுக்குருவி நன்றி என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு சென்றது. கிணற்றில் விழுந்த சிட்டுக்குருவி தோழி தன்னை காப்பாற்றாமல் போனதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த தோழி சிட்டுக்குருவி எப்போதும் தன் தோழி சிட்டுக்குருவியை எந்த ஆபத்தில் மாட்டிவிடலாம் என்று தவித்தது.
ஒருநாள் அந்த சிட்டுக்கருவிக்கு ஒரு வேடனால் ஆபத்து வந்தது. அப்போது தோழி சிட்டுக்குருவி தன் தோழி சிட்டுக்குருவியை காப்பாற்றியது. தோழி சிட்டுக்குருவி தன் தவறை உணர்ந்து தன் தோழியிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டது. எனவே நாம் யாருக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை உபத்தரவம் செய்யக் கூடாது.
கருத்து: நாம் மற்றவர்களுக்கு கெடுதல் நினைத்தால் கடவுள் நம்மை தண்டிப்பார்.
ரா. பிரியதர்ஷினி
வகுப்பு 8
ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி
பெரியவரிகம்.