மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Sunday, 13 April 2025

சிட்டுவின் கர்வம்




      ஒரு கிராமத்தில் அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அந்த அடர்ந்த காட்டில் ஒரு பெரிய மரத்தின் அருகில் வலது புறமாக நான் தான் அழகு என்று கர்வம் கொண்ட சிட்டுக்குருவி ஒன்று இருந்தது. அருகே மற்றொரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது.

     
     ஒரு நாள் இரண்டு சிட்டுக்குருவியும் ஆற்று பக்கம் சென்றது. அப்போது, கர்வம் கொண்ட சிட்டுக்குருவி ஆற்றினுள் எட்டி பார்த்து பார்த்தியா சிட்டுக்குருவியே நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்று சொன்னது. நீ எவ்வளவு அசிங்கமாக இருக்கிறாய்.. அதற்கு அந்த மற்றொரு சிட்டுக்குருவி அமைதியாகவே இருந்தது. திரும்ப திரும்ப அந்த சிட்டுக்குருவியை கேலி செய்தது. அதை எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு அமைதியாகவே இருந்தது. 


     திடீரென மழை பெய்தது. அப்போது ஒரு இடி வந்து அந்த கர்வம் கொண்ட குருவி  கூட்டை எரித்தது. சிட்டுக்குருவி அதில் மாட்டிக்கொண்டு தன் அழகை இழந்தது. 

      பின் மற்றொரு சிட்டுக்குருவி வந்து கர்வம் கொண்ட சிட்டுக்குருவியைக் காப்பாற்றியது. அந்த சிட்டுக்குருவி தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டது.


கர்வம் கொள்ளக்கூடாது.


நா.மோனிகா.
8-ஆம் வகுப்பு.
ஊ.ஒ.ந.நி.பள்ளி.
பெரியவரிகம்.

Pages