
ஓர் ஊரில் ஒரு காடு இருந்தது. அந்த காட்டின் பெயர் மலை காடு. ஏனென்றால் அந்த காட்டில் நிறைய மலைகள் உள்ளது. அதனால்தான் அந்த காட்டின் பெயர் மலை காடு என்று அடைந்துள்ளது. அந்த காட்டில் பூ, விலங்கு, பூச்சி, வண்ணத்து பூச்சி, பறவைகள் அனைத்தும் மழிழ்ச்சியாக உள்ளது. இப்படியே காலம் போய்விட்டன. ஒரு நாள் அந்த காட்டில் தண்ணீர் இல்லை.
அதனால் அனைத்து பறவைகள், விலங்குகள், பூச்சிகள் கொஞ்சம் கூட யோசிக்காமல் காட்டைவிட்டு போய்விட்டன. ஆனால் சிட்டுக்குருவிகள் மட்டும் அந்த காட்டிலே இருந்தன. அதுவும் தேடிதேடி பார்த்தன. தண்ணீர் கிடைக்கவில்லை. சிட்டுக்குருவியும் அந்த காட்டைவிட்டு போகலான்னு முடிவு எடுத்துச்சு ... அப்போதுதான் அந்த சிட்டுகுருவிக்கு ஒரு யோசனை. நம்ம காட்டில்தான் மலை இருக்கிறதே என்று சொல்லுச்சாம். அந்த மலையை தேடி போய்ச்சாம். அந்த மலையில் தண்ணீர் இருந்தன. அந்த தண்ணீரைப் பார்த்தவுடன்... அதை குடித்து விட்டு மகிழ்ச்சியாக காட்டுக்கு வந்தது.
மழைக்காலம் வந்தது. காடு முழுக்க மழை பெய்து தண்ணீர் பற்றாக்குறை தீர்ந்தது.
காடுகளைப் பாதுகாப்போம்..
நீரைப் பாதுகாப்போம்..
பறைவகளுக்கு உணவு அளிப்போம்..
ச. சோபிகா
வகுப்பு_5
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
பெரியவரிகம்.