
ஒரு காட்டில் மரத்தின் மேல் சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. காட்டில் உள்ள எல்லா விலங்குகளுக்கும் சிட்டுக்குருவியை ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் அது முன்னும் பின்னும் சிறகடித்து பறக்கும்.
அந்த காட்டில் சிட்டுக்குருவிக்கு மயில் தோழியாக இருந்தது. அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் சிட்டுக்குருவிக்கு மயில் ஞாபகமாக இருந்தது. ரொம்ப நாள் ஆகிவிட்டது. மயில் என்னை பார்க்க வரவே இல்லை. நானே மயிலைப் பார்த்துவிட்டு வரேன் என்று சொல்லி சிட்டுக்குருவி பறந்து போனது.
மயிலைப் பாரத்து "எப்படி இருக்க என் அழகு தோழியே... உன்னைப் பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது. அதனால்தான் நான் உன்னை எப்படி இருக்கனு பார்க்க உன் வீட்டுக்கு வந்தேன். எப்படி இருக்க?" என்று மயிலிடம் கேட்டது சிட்டுக்குருவி.
அதற்கு "நான் நல்லா இருக்கேன்" னு சொன்னது மயில்.
"நீ என் வீட்டிற்க்கு வந்தது மிகவும் சந்தோசம்" என்று சொன்னது.
"எனக்கும் உன் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது." என்றது மயில்.
உடனே சிட்டுக்குருவி கேட்டது "அப்ப நீ ஏன் பார்க்க வரல"னு கேட்டது.
"நான் என்ன செய்றது.. மழைக் காலம் வந்ததும் எனக்கு நடனம் ஆட ரொம்ப பிடிக்கும். ஆனா மழைக் காலத்தில் நீ உன் வீட்டிலேயே இருப்பாய். அதனால்தான் நான் என் வீட்டிலேயே இருந்தேன்." என்று கூறியது மயில்.
அதற்கு சிட்டுக்குருவி "எனக்கு மழைக் காலத்தில் என்ன நடக்கும்னு உனக்கு தெரியாதா? எனக்கு மழை வந்தா சளி பிடிக்கும். அப்புறம் எனக்கு காய்ச்சல் வந்திடும். ஆனால் உனக்கு அப்படி இல்லை. நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். ஆனால் நான் ஒரு நிறத்தில் மட்டும் தான் இருக்கிறேன். உனக்கு எவ்வளவு நிறங்கள் உள்ளது. ஆனால் நீ என்னோட உயிர் தோழி. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்." என்று கூறியது.
அதற்கு மயில் சொன்னது "உன்னிடம் சண்டை போட பிடிக்காது. நீயும் கொஞ்சம் புரிந்துகொள். நான் மழையில் நனைய எனக்கு பிடிக்குது. நீ மழையில் நனைய உனக்கு பிடிக்காது. அதுவும் சரிதான். ஆனாலும் நீ என் உயிர் நண்பன்" என்றது.
"என்னை மனிந்து விடு" என்று சொன்னது மயில்.
"பரவாயில்லை விடு. இனிமேல் என்னை பார்க்க அடிக்கடி வா. சரி வா நாம் இருவரும் காட்டைச் சுற்றி பறக்கலாம்." என்று சொன்னது சிட்டுக்குருவி.
உடனே இருவரும் மகிழ்ச்சியாக சிறகை விரித்து பறந்தனர்.
_____K.ரித்திஸ்ரீ_____
வகுப்பு__4
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.
பெரியவரிகம்.