
ஓர் காட்டில் சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. அந்த காடு பசுமையான மற்றும் வளமான காடாக இருந்தது. அந்த காட்டில் ஓர் அடர்ந்த மரம் ஒன்று இருந்தது. அந்த மரக்கிளையில் சிட்டுக்குருவி ஒன்று கூடுகட்டி வாழ்ந்து வந்தது.
அப்போது அந்த கூட்டில் சிட்டுக்குருவி மூன்று முட்டை இட்டது. சிலநாட்கள் கடந்தது. அந்த சிட்டுக் குருவிக்கு மூன்று குட்டி சிட்டுக்குருவிகள் அழகாக பிறந்தன. அப்படியே சிலநாட்கள் கடந்தது. அந்த காட்டில் பசுமையும் இல்லை... நீரும் இல்லை... தன் குஞ்சுகளோடு கிராமத்துக்கு சென்றது. கிராமத்தில் பூக்கள், செடி, கொடி, மற்றும் விலங்குகள் வாழ்ந்து வந்தன.
அதை சிட்டுக்குருவிகள் பார்த்து அருமையாக இருக்கு... இந்த கிராமம் என்று பேசிக் கொண்டு சிட்டுக்குருவிகள் கிராமத்தில் தங்க இடம் தேடியது. சிறிது நேரம் ஓய்வு எடுத்தது. சிறுது நேரம் கழித்து தங்க இடம் தேடிச் சென்றது. அந்த சிட்டுக்குருவிகள் இங்கேயும் அங்கேயும் அலைந்து சோர்வு அடைந்தன.
ஓர் இடத்தில் ஒரு அழகான மரம் ஒன்று, இருந்தது. சிட்டுக்குருவிகள் மாமரமே! மாமரமே! உன்கிளைகளில் எங்களுக்கு தங்க இடம் தருவியா என்று சிட்டுக்குருவிகள் கேட்டது. மரத்தில் தங்க இடம் தருகிறேன் என்று மாமரம் கூறியது. நன்றி மாமரமே என்று கூறியது சிட்டுக்குருவிகள்.
சிறிது காலங்கள் கடந்தது. மாமரத்துக்கு பக்கத்தில் குளம் ஒன்று அழகாக இருந்தது. அந்த குளத்தில் அழகாக மீன்கள் மற்றும் செடிகள், கொடிகள், அம்சமாக நீர் இருந்தன. சிட்டுக்குருவிகள் மூன்று பேருமே வளந்ததுங்க. சிட்டுக்குருவிகளோடு அம்மாவுக்கு குளிர்காய்ச்சல் வந்தது. இரண்டு மாதங்களாக குளிர்காய்ச்சல் இருந்தது. அந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு மூன்று சிட்டுக்குருவிகளோடு அம்மா இறந்துவிட்டது. மூன்று சிட்டுக்குருவிகளும் அழுதன.. நம்மளோட அம்மா இறந்துவிட்டாங்களே என்று கவலையுடன் அழுதது.
மூன்று சிட்டுக்குருவிகள் அம்மா இறந்ததை நினைத்து கவலைப்பட்டதுங்க அம்மா இல்லையே என்று வருத்தம் அடைந்தன. அம்மா அம்மா என்று அழுதன.
அப்பொழுது சிட்டுக்குருவிகள் தங்கும் மாமரம் கூறியது சிட்டுக்குருவிகளே, நான் உங்களுக்கு ஒரு வரம் தருகிறேன் உங்கள் அறையில் சென்று பாருங்கள். உங்க அம்மா இருப்பாங்க. நான் உனக்கு வரம் தருகிறேன் என்றது மாமரம். நன்றி மாமரமே என்று சிட்டுக்குருவிகள் மகிழ்ச்சியுடன் கூறின.
நீதி: குழந்தைகளுக்கு அம்மா இல்லை என்றால் கவலை. பெற்றோர்களுக்கு குழந்தைகள் தாம் முக்கியம். நமக்காக கஷ்டப்படும் பெற்றோர்களைப் பாதுகாப்போம்.
கு. ஜெயஸ்ரீ
வகுப்பு 5
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
பெரியவரிகம்.