
ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ராமு என்ற ஒரு பையனும் -அவனது அம்மாவும் பாட்டியும் வாழுந்து வந்தார்கள். அவன் ஒரு நாள் காட்டிற்கு போய் காய்ந்த விறகுகளை வெட்டினான்.
அப்போது ராமு மாமரத்தில் ஒரு பாம்பு அங்கிருந்த முட்டைகளை உணவாக உண்பதற்கு பார்த்து கொண்டிருந்தது. அதை ராமு கவனித்துக் கொண்டிருந்தான். உடனடியாக வெட்டியிருந்த விறகுகளில் ஒரு விறகை அந்த பாம்பை நோக்கி தூக்கி போட்டான். பாம்பு சென்று விட்டது. ராமு அந்த முட்டையைப் பார்த்து இது எந்த பறவையின் முட்டை என்று சிந்தித்தான் அவனுக்கு தெரியவில்லை. சரி என்று விட்டிற்கு முட்டையை எடுத்து சென்றான். அவன் பாட்டியிடம் இது எந்த பறவையின் முட்டை என்று கேட்டான்.
பாட்டி சொன்னார், "இது சிட்டுகுருவியின் முட்டை."
"ஓ... இதுதான் சிட்டுகுருவி முட்டையா?"
"ஆமா... இது சிட்டுகுருவி முட்டைதான். இது எங்கே இருந்து எடுத்தாயோ.. திரும்பி அங்கே வைத்து விடு. "
"ஏன் பாட்டி... சிட்டுகுருவி முட்டையை நாமே வளர்க்க கூடாதா?." என்று கேட்டான்.
" உனக்கு எப்படி அம்மா இல்லை என்றால் அழுவாய். அதே மாதிரி தான் சிட்டுகுருவி குஞ்சுகளும்."
ராமு உடனடியாக சிட்டு குருவியின் முட்டைகளை எடுத்துக் கொண்டு காட்டிற்கு சென்றான். மாமரத்தின் மேல் அம்மா சிட்டுக்குருவி அங்கும் இங்கும் பார்த்து கத்தி கொண்டிருந்தது.
ராமு மாமரத்தின் மேல் ஏறும்போது அம்மா சிட்டுக்குருவி கத்தியது, ராமு உடனடியாக சிட்டுகுருவி முட்டைகளை கூட்டில் வைத்தான். ராமு கீழே இறங்கினான். கொஞ்சநாள் கழித்து முட்டையில் இருந்து சிட்டுக்குருவி வெளிவந்தது. அம்மா சிட்டுக்குருவி குஞ்சுகளைக் கட்டி அணைத்தது. அதை பார்த்து ராமு தன் அம்மாவிடம் ஓடி அவனும் அம்மாவை கட்டி அணைத்தான். அம்மாவுக்கு மிகுந்த சந்தோஷம்.
"அம்மா பறவைகளுக்கு நீரும், உணவும் வைக்கணும்னு பள்ளியில் ஆசிரியர் சொன்னாங்க.."
"ரொம்ப நல்ல விசயம். அப்படியே செய்"
ராமு மகிழ்ச்சியுடன் துள்ளி சென்றான்..
பறவைகளுக்கு உணவும், நீரும் அளிப்போம்.
மரம் நடுவோம்.. மழை பெறுவோம்..
மனிதனின் சுவாசம் காடு.
__ த. சாருலதா__
வகுப்பு -7
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
பெரியவரிகம்.