மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

"பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?" - அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்!

        

   2.0 படத்தில், செல்போன்களின் பயன்பாடுகள் அதிகரித்த பிறகுதான்
பக்ஷி ராஜ் போராட்டத்தில் இறங்குவார். ஆனால், ரியல் பக்ஷி ராஜான சலீம் அலி, தன்னுடைய 10-ம் வகுப்பில் இருந்தே பறவைகளை நேசிக்க ஆரம்பித்துவிட்டார்.
       மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது" இந்தியாவின் பறவைகள் மனிதர் என்றழைக்கப்படும் சலீம் அலி அடிக்கடி சொல்லும் கருத்து இது. பறவைகளுக்காகவே தன் வாழ்நாளில் பெரும்பாலான நாள்களைக் கழித்தவர் சலீம் அலி. அவரைப் பிரதிபலிக்கும் விதமாகவே, 2.0 படத்தில் அக்ஷய் குமாரின் பக்ஷிராஜ் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. 2.0 படத்தில், செல்போன்களின் பயன்பாடுகள் அதிகரித்த பிறகுதான் பக்ஷி ராஜ் போராட்டத்தில் இறங்குவார். ஆனால்,  சலீம் அலி, தன்னுடைய 10-ம் வகுப்பில் இருந்தே பறவைகளை நேசிக்க ஆரம்பித்துவிட்டார்.
        1896-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் சலீம் மொய்சுதீன் அலி. இவரின் உறவினர்கள் அவ்வப்போது பறவை வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். ஒருமுறை, சலீம் அலியும் வீட்டில் இருந்தபோது ஒரு குருவியை சுட்டுள்ளார். அப்போது துடிதுடித்து கீழே விழுந்த அந்த குருவியின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்ததைக் கண்ட சலீம் அலி, அதுகுறித்து தெரிந்துகொள்வதற்காக பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்திற்கு சென்றார். ஆனால், அதோடு நிறுத்திக் கொள்ளாமல், பொதுவாகப் பறவைகளை கண்டறிவது எப்படி, அவற்றைப் பாதுகாப்பது எப்படி என்று பல தகவல்களை அங்கே கற்றுக்கொண்டார். அப்போதுதான், சலீம் அலிக்குப் பறவைகள் குறித்து ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பறவைகள் குறித்து தொடர்ந்து ஆய்வில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

      இந்தியப் பறவைகள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகள் பற்றிய கையேடு போன்ற புத்தகங்களின் மூலம் இந்தியப் பறவைகளை உலகறியச் செய்தவர். இந்தியாவின் பறவை மனிதர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்துடன் (Bombay Natural history society) நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கும் அடிக்கடி வந்திருக்கிறார்.   

    அவரது பெயரில் கோவையில் ஒரு பறவைகள் ஆராய்ச்சி மையத்தைத் திறக்க ஆலோசனைகள் நடந்து வந்தது. ஆனால், 1987-ம் ஆண்டு சலீம் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, 1990-ம் ஆண்டு கோவை ஆனைகட்டியில், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் தொடங்கப்பட்டது. தற்போதும், பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்குப் பயின்று வருகின்றனர். 

  அவரின் மாணவர்கள் சிலர், ஆரம்பக்கட்டத்தில் இந்த மையத்தில் விஞ்ஞானிகளாக இருந்துள்ளனர். இப்போதும் இருக்கின்றனர்.
     

Pages