மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

திரிபாலா சூரணம்___நெல்லிக்காய்

திரிபாலா சூரணம்
விதை நீக்கிய நிலையில் உள்ள கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றையும் தனித்தனியாக காயவைத்து தூள் செய்து
வைத்துக்கொண்டு, சம அளவாக ஒன்றாகக் கூட்டி நன்கு, கலந்து, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே திரிபலம் அல்லது திரிபலா சூரணம் எனப்படும் ஒரு பலநோக்கு கை மருந்து ஆகும்.
2 தேக்கரண்டி பொடியை ½ லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். 6 முறைகள் தினமும் கண்களை இந்த நீரால் பஞ்சு கொண்டு துடைக்க கண் எரிச்சல் மற்றும் கண்ணில் தண்ணீர் வருவது கட்டுப்படும்.
புளிச்ச ஏப்பம், செரியாமை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளுக்கு ஒரு தேக்கரண்டி பொடியை வாயிலிட்டு, வெந்நீர் அருந்த வேண்டும். இதை ஒரு மந்திர மருந்தாக உணரலாம்.
ஒரு பிடி நெல்லக்காய் இலைகளை 1 ½ லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதைப் பொறுக்கும் சூட்டில் வாயில் ஊற்றிக் கொப்பளிக்க வேண்டும். அல்லது பட்டையை தூள் செய்து வைத்துக் கொண்டு, தேனில் குழைத்து புண்ணின் மீது தடவ வாய்ப்புண் குணமாகும்.
சாதாரணமாக நமக்கு குறைந்த செலவில் கிடைக்கும் ஒரு சத்துள்ள பழம் நெல்லிக்காய் ஆகும். நுரையீரல் சார்ந்த காசநோயை இது விரைவாக குணப்படுத்துவது மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நெல்லிக் கனிகளை உலர்த்தி வற்றலாக்கி, வைட்டமின் “சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்களை நெல்லிக்காய் குணப்படுத்தும். மேலும், இது உடலில் எதிர்ப்பு சக்தியை நிலைப் படுத்தக் கூடியது. மொத்தத்தில் நெல்லிக்காய ஒரு கற்ப மருந்தாகத் திகழ்கின்றது.

Pages